முன்னாள் ஜனாதிபதி கலாம் ராமநாதபுரம் கல்லூரிக்கு வருகை
ராமநாதபுரம்: செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரிக்கு அக். 3 ம் தேதி அப்துல் கலாம் வருகை தர உள்ளதாக கல்லூரி செயலாளர் சின்னத்துரை அப்துல்லா தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாட உள்ளார். அன்று காலை 10 மணி முதல் 11.15 வரை நடக்க உள்ள இந்த சந்திப்பில் செய்யது அம்மாள் மேல்நிலை பள்ளி, செய்யது அம்மாள் மெட்ரிக்., மேல்நிலை பள்ளி, நேசனல் அகாடமி மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர். அறக்கட்டளை தலைவர் பாபு அப்துல்லா நினைவு பரிசு வழங்குகிறார். அப்துல் கலாம் வருகையை முன்னிட்டு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சின்னத்துரை அப்துல்லா கூறினார்.