வட்டார வளமைய ஆசிரியர்களுக்கு செயல்வழி கற்றல் பயிற்சி
கோவை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு கோவை காருண்யா பல்கலையில் ஐந்து நாட்கள் பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கு செயல்வழி கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் வட்டார வள மைய பயிற்சி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர் ஆகிய நான்கு மாவட்டத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்களுக்கு அக்.,13 முதல் 17ம் தேதி வரை யோகா, செயல்வழி கற்றல் பயிற்சிகள், கோவை காருண்யா பல்கலை வளாகத்தில் அளிக்கப்படவுள்ளன.