உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டு கல்வி கற்க தமிழக மாணவர்கள் ஆர்வம்!

வெளிநாட்டு பல்கலைகளில் அட்மிஷன் பெற தேவையான தகுதித் தேர்வுகளுக்கு கடந்த 16 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் ‘தி சோப்ராஸ்’ நிறுவனம் இந்த  கண்காட்சியை நடத்தியது. அமெரிக்கா கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெற உதவும் சேட், ஜி.ஆர்.இ., ஜிமேட், எல்சேட் போன்ற தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கும் ‘கப்லான்’ நிறுவனத்தின் கல்வி மையமாகவும் ‘தி சோப்ராஸ்’ விளங்குகிறது. இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் ‘குளோபல் எஜுகேஷன் இன்டரேக்ட்’ எனும் தலைப்பிலான கல்வி கண்காட்சியை இந்நிறுவனம நடத்தி வருகிறது. சென்னையில் நடந்த கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 650 மாணவர்கள் பங்கேற்றனர். தங்களது பெயரை பதிவு செய்த மாணவர்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளில் இருந்து வந்திருந்த 16 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் நேரடியாக கலந்துரையாடினர். கண்காட்சிக்கு சென்னை மைய மேலாளர் சங்கீதா விர்மானி தலைமை வகித்தார். தி சோப்ராஸ் சி.ஓ.ஒ., அமிதாப் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘டெல்லி, கொல்கத்தா, டில்லி, புனே, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இந்த வெளிநாட்டு கல்வி கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பதிவு செய்து வருகினறனர். இந்த கண்காட்சியில் பங்கேற்று.கடந்த ஆண்டு 450 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றனர். இந்த ஆண்டு 500 மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த கண்காட்சியில் பங்கேற்க மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை‘ என்றார். அடுத்தகட்டமாக அக்டோபர் 4ம் தேதி பெங்களூரிலும், 6ம் தேதி ஹைதராபாத்திலும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்