தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
மும்பை: மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதை தடுக்க, அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இந்தியாவில், அரசு பள்ளிகளில், படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பது அனைத்து தரப்பினருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இடையிலேயே படிப்பை கைவிடுவதும் பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதன்படி, அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ‘கைவல்யா கல்வி நிறுவனம்’ என்ற அமைப்பு தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை நடத்தவுள்ளது.