வெற்றிக்கு என்ன வழி? பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஆலோசனை!
இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவர்கள் எதிர்கொள்வது குறித்தும், அதிக மதிப்பெண் பெறும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. டாக்டர் எம்.கண்ணன் (மதுரை சமூகவியல் கல்லூரி பேராசிரியர்): பயம், தூக்கம் ஆகியவை மனம் தொடர்பான பிரச்னைகளே தவிர உடல் தொடர்பான பிரச்னைகள் அல்ல. சுயகட்டுப்பாடு, கடின உழைப்பு இல்லாதவர்கள் எதையும் சாதிக்க முடியாது. நம்பிக்கை குறையும் போது பயம் ஏற்படும். மாணவர்களின் கடைசி நேர தயாரிப்பு நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்தும். மன தைரியத்துடன் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். 10ம் வகுப்பு ஆலோசனை விவரம்: ஆங்கிலம், முருகவேல் (அரசு மேல்நிலைப்பள்ளி, அல்லிநகரம்): பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுக்குரிய கேள்விகளை மட்டும் பொதுத்தேர்வுக்கு படித்தால் சுலபமாக அதிக மார்க் பெறலாம். முதல் மூன்று பாடங்களில் இருந்து கட்டுரை, ‘பாராகிராப்’ கேள்விகள் வரும். சப்-டைட்டில் கொடுத்து எழுத வேண்டும். ‘போயம்’ பகுதியில் பத்து மார்க் எளிதில் பெறமுடியும். இதை நன்கு படித்தால் ‘இ.ஆர்.சி.’ கேள்விகளுக்கும் பதில் எழுத முடியும். அறிவியல், ஜி.பாண்டியன்(என்.எஸ்.,ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி): புத்தகத்தை படித்து முக்கிய இடங்களில் கோடிட்டு நினைவில் கொள்வது ஒரு மார்க் கேள்விக்கு பதில் எழுத உதவும். ‘பாய்ண்ட்’ உள்ள பதில்கள் எழுதும்போது ஒரே பக்கத்தில் இருக்கும்படி எழுத வேண்டும். தேவையான இடங்களில் படம் வரைந்து பாகங்கள் குறிக்க வேண்டும். பெரிய கேள்விகள் தேர்வு செய்யும்போது ‘பாய்ண்ட்ஸ்’ உள்ளவையாக தேர்வு செய்தால் நேரம் மிச்சமாகும். கணிதம்,சுயம்புக்கனி(அரசு மேல்நிலைப்பள்ளி, அல்லிநகரம்): கணக்கில் சூத்திரங்களை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். கிராப், அட்டவணை, அளவுத்திட்டம், தீர்வு, எக்ஸ் அச்சு, ஒய் அச்சு இவற்றிற்கு தனித்தனியாக மார்க் உண்டு. இயற்கணிதத்தில் காரணிப்படுத்துதல், வர்க்கமூலம் ஆகியவை முக்கியமானவை. சமூக அறிவியல்,வி.ராஜாராம் (இந்து மேல்நிலைப்பள்ளி, சக்கம்பட்டி): முந்தைய ஐந்து ஆண்டு பொதுத்தேர்வு கேள்வித்தாள்களில் உள்ள ஒரு மார்க் கேள்விகளை நன்கு படிக்க வேண்டும். வரலாறு பாடத்தில் டல்ஹவுசி, வெல்லெஸ்லி கால இந்திய ஆட்சிப்பகுதிகள் அடிக்கடி கேட்கப்படும். புவியியலில் தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசைகள், இந்தியாவின் மண் வகைகள், கோதுமை விளையும் பகுதிகள், பெட்ரோல் கிடைக்கும் பகுதிகளை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பற்றி அடிக்கடி கேள்விகள் வரும். பிளஸ் 2 மாணவர்களுக்கான ஆலோசனை: ஆங்கிலம், எல்.ஆர்.சங்கரப்பன் தலைமை ஆசிரியர்(என்.எஸ்.,ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி) : விடைத்தாளில் அடித்தல், திருத்தல் கூடாது. ‘வெகாபுளரி’ பகுதிகளை நன்கு படித்துக்கொள்ள வேண்டும். முதல் தாளில் பாடப்புத்தகத்தில் உள்ள கேள்விகள் கேட்கப்படும். ‘டயலாக்’ பகுதியில் எளிதில் மார்க் பெறலாம். ‘மேட்ச்சிங்’ பகுதியில் எது புரிகிறதோ அதை முதலில் பொருத்தி விட வேண்டும். ‘ஆங்கில கட்டுரை’ ஒரே பக்கத்தில் எழுத வேண்டும். வேதியியல், இளங்கோ (ஸ்ரீகிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி,சின்னமனுõர்): புத்தகத்திற்கு பின்புறம் உள்ள கேள்விக்கான பதில்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அணு அமைப்பு, ‘டி’ தொகுதி தனிமங்கள், ‘எப்’ தொகுதி தனிமங்கள், அணைவுச்சேர்மங்கள் பகுதிகளில் ஐந்து மார்க் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும். எந்த கேள்வியையும் விட்டு விடாமல் அவசியம் தெரிந்த அளவு எழுதி விட வேண்டும். இயற்பியல்,அவிலா(பி.சி.,கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, தேனி): 60 சதவீத ஒரு மார்க் கேள்விகள் பாடத்தின் பின்பகுதியில் உள்ள கேள்விகளில் இருந்து வருகிறது. குறை கடத்தி சாதனங்கள் அதன் பயன்கள், தகவல் தொடர்பு அமைப்புகள், நிலைமின்னியல் பாடங்கள் முக்கியமானவை. பாடம் 8ல் அடிக்கடி கணக்கு கேட்கப்படும். கணக்கு பகுதியை விட்டு விடக்கூடாது. பார்முலா, டேட்டா’ எழுதினால் அதற்கும் மார்க் உண்டு. தாவரவியல், எஸ்.உலகராஜன்(என்.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி): விடை எழுதும்போது தெளிவாக படம் வரைந்து பாகங்கள் குறிக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் எடுத்துக்காட்டு அவசியம். 5 மார்க், 10 மார்க் வினாக்கள் எழுதுவதற்கு உயிரியல் மாணவர்கள் 1, 2, 4, 5 ஆகிய பாடங்களிலும், தாவரவியல் மாணவர்கள் 1, 2, 4, 5 பாடங்களிலும் தெளிவாக இருக்க வேண்டும். விலங்கியல், எம்.செல்வம்(எஸ்.யு. எம்.,மேல்நிலை ப்பள்ளி, ராயப்பன்பட்டி): மூன்று மார்க் வினாக்களுக்கு உயிரியல்-விலங்கியல் மாணவர்கள் 1, 2, 3, 4, 6 ஆகிய பாடங்களையும், 5 மார்க் வினாக்களுக்கு 1,2,3,4 பாடங்களையும், விலங்கியல் மாணவர்கள் 1, 2, 3, 4, 6, 8 பாடங்களை ஒரு மார்க் வினாக்களுக்கும், ஐந்து மார்க் வினாக்களுக்கு 1, 2, 3, 5, 6 பாடங்களை படித்தால் போதுமானது. கணிதம், சி.தினகரன்(ஸ்ரீ வரத வேங்கிடரமணா மேல்நிலைப்பள்ளி, வெங்கடாச்சலபுரம்): தேர்ச்சி பெற முதல் தொகுதியில் அனைத்து பாடங்களும் தெளிவாக இருக்க வேண்டும். இதில் 130 மார்க் இடம் பெறும். புத்தகத்தின் பின்புறம் உள்ள ஒரு மார்க் வினாக்களில் திரும்ப திரும்ப பார்க்க வேண்டும். கணக்குகளை பார்க்கும்போதே சூத்திரங்களையும் எழுதி பார்க்க வேண்டும். முக்கிய கேள்விகளை திரும்ப திரும்ப எழுதி பார்க்க வேண்டும். படம் தேவை எனில் அவசியம் வரைய வேண்டும். அதற்கும் மார்க் உண்டு.