உள்ளூர் செய்திகள்

குடியரசு தின அணிவகுப்பு: என்.எஸ்.எஸ்., மாணவர்கள் தேர்வு

கோவை: டில்லியில் வரும் ஜன., மாதம் நடக்கவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி முகாம், திருவனந்தபுரத்தில் அக்., 30 முதல் நவ., 9ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இப்பயிற்சி முகாமில் பங்கேற்க கோவை பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் இருந்து 10 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம்:கே.ஜி., கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த அசோக், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவைச் சேர்ந்த முகேஷ்பாபு, ராஜேஷ், என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லூரி மாணவர் ரஞ்சித், எஸ்.எம்.எஸ்., கலை அறிவியல் கல்லூரி மாணவர் கார்த்திகேயன், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவி சரண்யா, கற்பகம் கலை அறிவியல் கல்லூரி மாணவி சரண்யா ராகவன், மகாராஜா கலை அறிவியல் கல்லூரி மாணவி கிருத்திகா, குன்னுõர் புராவிடன்ஸ் மகளிர் கல்லூரி மாணவி சிஞ்சு ரோசா, ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரி மாணவி பிரியா. பயிற்சி முடிவில் இந்த மாணவர்களை அனைத்திந்திய தேர்வு கமிட்டி ஆய்வு செய்து, டில்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள தகுதியான மாணவ, மாணவியரை தேர்வு செய்யும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியர் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பர். இத்தகவலை கோவை பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் செல்லச்சாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்