உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைந்தது

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுதேர்வு, நேற்று முடிவடைந்தது. கடந்த மார்ச், 27ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து வந்தன. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய தேர்வுகளில், வித விதமான குளறுபடிகள் நடந்தன. குறிப்பாக, விடைத்தாள் கட்டுகள் மாயமான விவகாரமும், 10 லட்சம் மாணவர்களுக்கும், கேள்வி தாளுடன், விடை எழுத வேண்டிய, வங்கி செலான் வழங்காத விவகாரமும், தேர்வு துறையை அதிர்ச்சி அடைய வைத்தது. கடைசியில் நடந்த சமூக அறிவியல் தேர்வில், எந்த குளறுபடியும் ஏற்படவில்லை. சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேர்வெழுதிவிட்டு வந்த மாணவ, மாணவியர், தேர்வு எளிதாக இருந்தது என்றும், குளறுபடி இல்லை என்றும், உற்சாகத்துடன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்