உள்ளூர் செய்திகள்

முதுகலை ஆசிரியர் தேர்வு: உத்தேச விடைகள் வெளியீடு

காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள், கடந்த, 21ம் தேதி நடந்தது. மாநிலம் முழுவதும், 1.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும், "ஸ்கேன்" செய்து முடித்த நிலையில், கேள்விகளுக்கான உத்தேச விடைகள் (கீ-ஆன்சர்), www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டது. தேர்வர்கள் விடைகளைப் பார்த்துவிட்டு, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு எழுத்துப்பூர்வமாகவோ, நேரடியாகவோ தெரிவிக்கலாம். இந்த கோரிக்கைகள் குறித்து, பாட வாரியாக நிபுணர் குழு ஆய்வு செய்து முடிவெடுத்த பின், இறுதி விடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்