விதிமீறும் வாகனங்களை கண்டறிய மாணவர்களுக்கு தபால் அட்டை
நெல்லை: "மாணவர்களுக்கு தபால் அட்டை வழங்கி, விதிமீறும் வாகனங்களை கண்டறிய ஏற்பாடு செய்யப்படும்" என மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலூரில், நெரிசலை சீர்செய்ய, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனை பாலகிருஷ்ணன் எஸ்.பி., திறந்து வைத்து பேசியதாவது: பொதுமக்கள், வாகன ஓட்டிகள், நெரிசலற்ற நிம்மதி உணர்வுடன் இருக்கும்படி போக்குவரத்து போலீசார் செயல்பட வேண்டும். குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் செயல்பட வேண்டும். சட்டம், போக்குவரத்து, சாலை பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் முன், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களிடம், போலீஸ் அதிகாரியின் முகவரியிட்ட தபால் அட்டையை கொடுக்க வேண்டும். அதில், விதிமீறும் வாகனங்களின் எண்கள், நேரம் ஆகியவற்றை குறித்து போலீசுக்கு அனுப்பலாம். அதன் மூலம் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும், என்றார்.ண டி.எஸ்.பி., அசோக்குமார், இன்ஸ்பெக்டர்கள் ஆவுடையப்பன், வெள்ளைச்சாமி மற்றும் வர்த்தகர் சங்கம், ஆட்டோ சங்கம், மனித உரிமை சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.