பாலிடெக்னிக்கில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு துவக்கம்
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் பாலிடெக்னிக்கில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு துவக்க விழா நடந்தது. கல்லூரி சேர்மன் முருகானந்தம் தலைமை வகித்தார். புரவலர் கே.வி.எஸ்.பாண்டியன் முன்னிலை வகித்தார். முதல்வர் கமலநாதன் வரவேற்றார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவை துவக்கி வைத்து, ஓய்வுபெற்ற விஞ்ஞானி வித்யாசாகர் பேசுகையில், "ஆராய்ச்சி நிறுவனங்களுக்காக மத்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. சிறு, சிறு திறன் கூட ஆராய்ச்சிதான். ஆராய்ச்சி திறனை வளர்க்க மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் ஊக்கம் அளிக்க வேண்டும்" என்றார்.