உள்ளூர் செய்திகள்

வாய்ப்பை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுல மெட்ரி மேல்நிலைப் பள்ளியின் மாணவர் பாராளுமன்றம் துவக்க விழா மற்றும் முன்னாள் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சான்றுகள் வழங்கும் விழா சாரதா ஆசிரம வளாகத்தில் நடந்தது. ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம பிரியா அம்பா தலைமை தாங்கினார். குருகுல பள்ளி முதல்வர் அவியகாட்பிரணா மாஜி வரவேற்றார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. முருகன் கலந்து கொண்டு பேசியதாவது: மாணவர்கள் சோதனைகளை தாண்டி சாதனைகளை புரியவேண்டும். சோதனை என்ற கொம்பை உடைப்போம், சாதனை படைப்போம். நமக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியான நேரத்தில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்களிடம் குறும்பு தனம் இருக்க வேண்டும். வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு நீங்களும் முன்னேற வேண்டும். பார்க்கும் பார்வை, பேசுகிற பேச்சும் வித்தியாசம் இருக்க வேண்டும். முயற்சி இருந்தால் எதையும் சாதிக்க முடியும். முயற்சி இருக்கவேண்டும், கடமையை செய்ய வேண்டும். பலனை எதிர்பார்க்கக் கூடாது. எனவே மாணவர்கள் நன்கு படித்து முன்னேறவேண்டும். இவ்வாறு டி.ஐ.ஜி. முருகன் பேசினார். தொடர்ந்து முன்னாள் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சான்றுகள் வழங்கி பாராட்டினார். தனி பிரிவு எஸ்.ஐ. க்கள் ஹரிகரன், அந்தோணி மற்றும் கோவிந்தராஜன், ஆசிரம சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்