உள்ளூர் செய்திகள்

நல்லாசிரியர் விருதுகளை அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நல்லாசிரியர் விருதுகளை, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதுகுறித்து, முதல்வர் ரங்கசாமி நேற்று கூறியதாவது: ஆசிரிய சமுதாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டும், அவர்களது கல்விப் பணிகளைப் பாராட்டும் வகையிலும், பல்வேறு நிலைகளில் விருதுகள் அரசால் வழங்கப்படுகிறது. மாநில நல்லாசிரியர் விருது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இவர்கள் அனைவருக்கும், சான்றிதழும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் ஆசிரியர் தின விழாவில் வழங்கப்படும். ஓய்வுபெறும் 193 ஆசிரியர்களும், விழாவில் கவுரவிக்கப்படுகின்றனர். 2013ம் ஆண்டிற்கான, தேசிய நல்லாசிரியர் விருது, தொடக்கக் கல்வி பிரிவில், முத்திரைப்பாளையம், ஆயி அம்மாள் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியின் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் கணபதிக்கும், மேல்நிலைக் கல்வி பிரிவில், முத்திரைப்பாளையம், இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி முதல்வர் வேல்முருகனுக்கும் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. மாநில அரசு விருது பெற்றவர்கள் விபரம் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது துவக்கக்கல்வி பிரிவு ஆறுமுகம், தலைமையாசிரியர், அரசு துவக்கப்பள்ளி, ஆண்டியார்பாளையம்.செல்வி, தலைமையாசிரியை, அரசு துவக்கப்பள்ளி, சேந்தநத்தம். இடைநிலைக்கல்வி பிரிவு ஷகீலா வாகீது, துணை முதல்வர், திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி.ரகோத்தம்மன், துணை முதல்வர், வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லாஸ்பேட்டை. முதல்வரின் சிறப்பு விருது (மொழியாசிரியர்) பூங்குழலி, பட்டதாரி ஆசிரியர் (தமிழ்), சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. பெண் ஆசிரியர்கள் கலிதேவ்ரா ரத்ன பிரபா, விரிவுரையாளர் (இந்தி), எஸ்.டி.பி.பி., ஜூனியர் கல்லுாரி, ஏனாம்விஜயலட்சுமி, விரிவுரையாளர் (உடற்பயிற்சி), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருநள்ளாறு, காரைக்கால்.கஸ்துாரி, பட்டதாரி ஆசிரியர், (தமிழ்), அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, கோவில்பத்து, காரைக்கால்.காஞ்சனவள்ளி, தலைமையாசிரியை (துவக்கப்பள்ளி)அரசு கீழ்நிலை துவக்கப்பள்ளி, பந்தக்கல், மாகே. கல்வி அமைச்சரின் வட்டார விருது அச்சுதன், தலைமையாசிரியர் நிலை -2, தட்சிணாமூர்த்தி அரசு உயர்நிலைப்பள்ளி, வம்பாகீரப்பாளையம். வெற்றிவேல், பட்டதாரி ஆசிரியர் (தமிழ்), பாரதி அரசு மேல்நிலைப்ப்ளி, பாகூர்.அமலோர், பட்டதாரி ஆசிரியர், தமிழ்த் தென்றல் திரு.வி.க., அரசு உயர்நிலைப்பள்ளி.மூர்த்தி, தலைமையாசிரியர் நிலை -2, அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளி, திலாஸ்பேட்டை.சவுந்திரராசு, பட்டதாரி ஆசிரியர் (தமிழ்), கோவிந்தசாமி அரசு உயர்நிலைப்பள்ளி, காரைக்கால்.ராஜேஸ்வரி, விரிவுரையாளர் (தாவரவியல்), தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்கால். ராஜூவ், விரிவுரையாளர், சி.இ., பரதன் அரசு மேல்நிலைப்பள்ளி, மாகே.வொகு ஏடுகொண்டல வெங்கட்ட ரமணமூர்த்தி, பட்டதாரி ஆசிரியர், அம்பேத்கார் அரசு உயர்நிலைப்பள்ளி, பரம்பேட்டா, ஏனாம். இவ்வாறு முதல்வர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்