உள்ளூர் செய்திகள்

நகராட்சி துவக்கப் பள்ளி அருகே சுகாதார சீர்கேடு

திண்டிவனம்: திண்டிவனத்தில் நகராட்சி துவக்கப் பள்ளி அருகே சுகாதார சீர்கேடு காரணமாக தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. திண்டிவனம் முருங்கப்பாக்கம் நகராட்சி துவக்கப் பள்ளி நுழைவு வாயில் எதிரே, அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். பள்ளி வாயில் முன்பு மாடுகளை கட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு, குழந்தைகளுக்கு கொசுக்கடி மற்றும் நோய்கள் பரவும் அபாய நிலை உள்ளது. பள்ளி முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும். குழந்தைகள் படிக்கும் பள்ளியை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்