மாணவியர் விடுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
கடலூர்: கடலூர் சேவை இல்ல வளாகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவியர் விடுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார். விடுதியில் 159 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். மாணவிகளுக்கு உணவு சமைக்கும் இடத்தை உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, ஆய்வாளர்கள் நல்லதம்பி, சுப்ரமணி, நந்தகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, சுத்தமாக உணவு தயாரிக்கப்பட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும். சமையலர் மற்றும் பரிமாறுபவர்கள் இருவரும் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என, அறிவுறுத்தினர்.