முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் அசத்தல்
திருப்பூர்: திருப்பூரில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற, முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், மாணவர்களும், விளையாட்டு வீரர்களும் பங்கேற்று அசத்தினர். திருப்பூர் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தடகள போட்டி நேற்று நடந்தது. அதன் முடிவு வருமாறு: ஆண்கள் பிரிவு 100 மீ., ஓட்டம் - ரங்கராஜ் முதலிடம், நவநீத் 2ம் இடம், பிரண்ட்லைன் பள்ளி தியானேஸ்வரன் 3ம் இடம். 800 மீ., ஓட்டம் - தருண் முதலிடம், முத்தூர் கே.எம்., கல்லூரி சிவா 2ம் இடம், கரடிவாவி எஸ்.எல்.என்.எம்., பள்ளி கார்த்திக் ராஜ் 3ம் இடம். 5,000 மீ., ஓட்டம் - பொங்கலூர் பி.வி.கே.என்., பள்ளி சக்திவேல் முதலிடம், நஞ்சப்பா பள்ளி ஏழுமலை 2ம் இடம், ஆஷாத் மெட்ரிக் அப்துல் ரஷீக் 3ம் இடம். 110 மீ., தடை தாண்டும் ஓட்டம் - பி.வி.பி., டிரஸ்ட் கார்த்திக் முதலிடம், இன்பேன்ட் ஜீசஸ் முகமது அராபத் 2ம் இடம், கிருஷ்ணா விஷ்ணு 3ம் இடம். உயரம் தாண்டுதல் - செஞ்சுரி பள்ளி மாணவர்கள் கிருஷ்ண பிரசாத் முதலிடம், விக்னேஷ் 2ம் இடம், தினேஷ் 3ம் இடம். நீளம் தாண்டுதல் - லட்சுமணன் முதலிடம், சரவண குமார் 2ம் இடம், கரடிவாவி எஸ்.எல். என்.எம்., பள்ளி பொன் கேசவன் 3ம் இடம். மும்முறை தாண்டுதல் - பிரதீப் ராஜ் முதலிடம், பாஸ்கர் 2ம் இடம், உடுமலை சீனிவாசா வித்யாலயா ராஜா சூர்யா 3ம் இடம். குண்டு எறிதல் - நிர்மல்ராஜ் முதலிடம், செஞ்சுரி பள்ளி கசன்கான் 2ம் இடம், அருண் குமார் 3ம் இடம். வட்டு எறிதல் - ஹரீஸ் கல்யாண் முதலிடம், ரூபன்ராஜ் 2ம் இடம், செஞ்சுரி பவுண்டேசன் நீலேஸ்வரன் 3ம் இடம். ஈட்டி எறிதல் - தினேஷ்குமார் முதலிடம், நஞ்சப்பா பள்ளி சுரேஷ் 2ம் இடம், செஞ்சுரி பவுண்டேசன் காளிமுத்து 3ம் இடம். பெண்கள் பிரிவு தடகள போட்டி 100 மீ., ஓட்டம் - செஞ்சுரி பவுண்டேசன் யாஷிகா முதலிடம், காங்கயம் கார்மல் பள்ளி லாவண்யா 2ம் இடம், தாராபுரம் செயின்ட் அலோசியஸ் காவியா 3ம் இடம். 400மீ., ஓட்டம் - செஞ்சுரி பவுண்டேசன் லோகிதா முதலிடம், சாவக்கட்டுப்பாளையம் அரசு பள்ளி ஹேமா 2ம் இடம், காங்கயம் கார்மல் பள்ளி தர்ஷினி 3ம் இடம். 3,000 மீ., ஓட்டம் - குமுதா மெட்ரிக் பள்ளி சந்தியா முதலிடம், சாவக்கட்டுப்பாளையம் அரசு பள்ளி இந்து 2ம் இடம், சத்யவாணி 3ம் இடம். 100 மீ., தடை தாண்டும் ஓட்டம் - காங்கயம் கார்மல் பள்ளி சரண்யா முதலிடம், பிரண்ட்லைன் மெட்ரிக் பள்ளி ஸ்வேதா 2ம் இடம், தாராபுரம் செயின்ட் அலோசியஸ் செல்வபிரியா 3ம் இடம். உயரம் தாண்டுதல் - செயின்ட் அலோசியஸ் கலைராணி முதலிடம், செஞ்சுரி பவுண்டேசன் காயத்ரி 2ம் இடம், கார்மல் பள்ளி கோபிகா 3ம் இடம். நீளம் தாண்டுதல் - ரம்யா முதலிடம், மோனிஷா 2ம் இடம், புதுப்பாளையம் கொங்கு மெட்ரிக் பள்ளி சிந்து 3ம் இடம். மும்முறை தாண்டுதல் - பிரண்ட்லைன் பள்ளி கீதாஞ்சலி முதலிடம், குறிச்சிக்கோட்டை பி.வி.ஜி., பள்ளி பரமேஸ்வரி 2ம் இடம், பிரண்ட்லைன் பள்ளி நிவேதிதா 3ம் இடம். குண்டு எறிதல் - புதுப்பாளையம் கொங்கு மெட்ரிக் பள்ளி மதுமிதா முதலிடம், திருப்பூர் வித்யா மந்திர் பள்ளி காவ்யா 2ம் இடம், செயின்ட் ஜோசப் சுஷ்மா 3ம் இடம். வட்டு எறிதல் - கார்மல் பள்ளி ரக்ஷிதா எமி முதலிடம், செஞ்சுரி பவுண்டேசன் சவுந்தர்யா 2ம் இடம், சரண்யா 3ம் இடம். ஈட்டி எறிதல் - உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லூரி கலைமணி முதலிடம், சண்முகப்பிரியா 2ம் இடம், அபர்ணாஸ்ரீ 3ம் இடம். வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் 12ம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் ரொக்க பரிசு வழங்கப்படும் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமலிங்கம் கூறினார்.