உள்ளூர் செய்திகள்

ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு பிரச்னை ஏற்படாத வகையில் தேர்வு

பெங்களூரு: ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில், தேர்வு தினத்தை முன்கூட்டியே அறிவித்துவிட்டு அதே நாளில் தேர்வு நடத்தப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேஸ்வர் நாயக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்களுக்கு, டிப்ளமோ அட்மிஷனுக்காக, 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க, உயர் கல்வி துறை அமைச்சர் தேஷ்பாண்டே ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோன்று, டிப்ளமோவில் இடஒதுக்கீடு சலுகை வழங்கப்படும். ஐ.டி.ஐ., தேர்வுகள் சரியான நேரத்தில் நடக்காததால், மாணவர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக, புகார் வந்துள்ளது. அதிகாரிகளுடன் விவாதித்து, ஜனவரியில் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு முடிவு அறிவிக்கப்படும். மாநிலத்தின், 258 தொழில் கல்வி நிறுவனங்களில், 47,663 மாணவர்களும்; 196 தனியார் தொழில் கல்வி நிறுவனங்களில், 15,200 மாணவர்களும், 1,115 அரசு நிதியுதவி பெறும், தொழிற்கல்வி நிறுவனங்களில், 40,297 மாணவர்களும் கல்வி பயில்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்