உள்ளூர் செய்திகள்

வசதி இல்லாத உதவி பெறும் தொடக்க பள்ளிகள்!

காரைக்குடி: அரசு உதவி பெறும் பள்ளி களில் கழிப்பறை, மற்றும் கட்டட வசதி இல்லாத நிலை நீடிப்பதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி களில் மாணவர்கள் பாதுகாப் புக்கு போதிய நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. அதன்படி, சிதில மடைந்த கட்டடங்கள், சுவர்கள், அறிவியல் ஆய்வு கூடங்கள் இருப்பின் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு, மலேரியா கொசுக்களை பரப்பும் வகையில் தண்ணீர் தேங்கி நிற்க கூடாது, சுத்தமான சமைலறை பராமரிப்பு, கழிவு நீர் ஓடை அருகில் இருக்க கூடாது என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் பார்வையிட்டு, மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப் பட்டுள்ளது. ஒரு சில அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளின் நிலைமையோ மிக மோசமாக உள்ளது. சிவகங்கை மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் உள்ளன. சாக்கோட்டை ஒன்றி யத்தில் மட்டும் 30-க்கும் மேற் பட்ட பள்ளிகள் உள்ளன. கல்வியை மேம்படுத்தும் வகையில் சிறந்த அடிப்படை வசதி, ஆசிரியர்கள் சிறந்தோங்கி விளங்கிய பள்ளிகள், இன்று போதிய வசதி இன்றி காணப்படுகிறது. இதன் நிர்வாகிகளாக இருப்ப வர்கள் பெரும்பாலும் வெளி யூரில் வசிப்பதால், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில்லை. இதனால், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களும், மாணவர்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பல பள்ளிகளில் கழிப்பறை இருப்பதில்லை. சமையல் கூடத்தின் மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டு, அதுவும் ஒழுகும் நிலையில் உள்ளது. பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீர் வெளியே செல்ல வழியில்லை. சுற்று சுவர் போதிய அளவில் இல்லாததால், மழை நீர் வகுப்பறையிலும் தேங்குகிறது. மாணவர்கள் இதனால் நோய்க்கு ஆட்படுகின்றனர். மழை பெய்து வரும் நிலையில், கட்டடங்களின் நிலைமையால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட கல்வி அலுவலர்கள் உதவி பெறும் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தர நட வடிக்கை எடுக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், மாணவர் களிடையே எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்