உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

வெட்டுவாங்கேணி;அரசு பள்ளியில் மழைநீர் வடியாமல் இருப்பதால், பள்ளி மாணவர்கள் தற்காலிகமாக தனியார் பள்ளிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை, வெட்டுவாங்கேணி பாரதி தெருவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. அங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். சமீபத்திய மழைக்கு, பள்ளி வளாகத்தில், மழைநீரும், கழிவுநீரும் கலந்து தேங்கி, வடியாமல் நிற்கிறது. அதனால், மாணவர்களை, அதே பகுதியில் உள்ள, செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் படிக்க அனுமதித்துள்ளனர்.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:பக்கிங்ஹாம் கால்வாய் நிரம்பி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் மற்றும் மழைநீர் சூழ்ந்தது. அப்படித் தான் இந்த பள்ளியும் பாதிக்கப்பட்டுள்ளது. சில தினங்களில், மழைநீர் வெளியேற்றப்பட்டு, பராமரிப்பு பணிகளும் முடிந்து விடும். அதன் பின் மாணவர்கள், இந்த பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்யப்படும்.  இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்