உள்ளூர் செய்திகள்

அரூர் அரசு கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை

அரூர்: இணைய வழி விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு, அரூர் அரசு கல்லூரியில், நேரடி சேர்க்கை நடப்பதாக, கல்லூரி முதல்வர் செல்வபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், அரூர் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2020 - 21 கல்வியாண்டின் இணைய வழி விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு, கல்லூரியில் முதலாமாண்டு நேரடி சேர்க்கை நடக்கிறது. மாணவர்கள், தங்களுக்குரிய சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் நேரடியாக கல்லூரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு, இளங்கலை ஆங்கிலம், வணிகவியல், கணிதவியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேரலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்