உள்ளூர் செய்திகள்

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தமிழ் வழியில் வெளியீடு

ஆங்கில வழியிலான வரைவு பாடத்திட்டம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில், தமிழ் வழியிலான வரைவு பாடத்திட்டம், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு, நேரடியாக அறிவியல் பாடத்தை வைக்காமல், தாவரங்கள், பூக்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை பற்றி விளக்கும் வகையில், "சூழ்நிலையியல்&' என்ற பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அறிவியல் பாடம் உள்ளது. ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறைகள் இடம் பெற்றுள்ளன. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, மன நலன்கள், போதை மருந்துக்கு அடிமையாவதால் ஏற்படும் பாதிப்புகள், மருந்து பழக்கத்திற்கு அடிமையாவதற்கான காரணங்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில், தற்போதைய அறிவியல் வளர்ச்சி, விண்வெளி ஆய்வு ஆகியவை குறித்த பொருள் கள் இடம் பெற்றுள்ளன.   எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பருவமடைதல், இனப்பெருக்கத்தில், "ஹார்மோன்களின்&' பங்கு, ஊட்டச்சத்து ஆகியவை குறித்து பாடங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் பாடத்தை பொறுத்தவரை, தமிழ் மொழி, தமிழர் வாழ்வு, தமிழ் மரபு, பண்பாடு, தமிழ் கவிஞர்கள், உலகறிந்த தமிழர்கள், நாட்டுப்புற பாடல் கள், நாள்தோறும் சந்திக்கும் சமுதாய பிரச்னைகள், பெண்கள் முன்னேற்றம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், மதசார்பற்ற கருத்துக்கள், சிந்தனையைத் தூண்டும் கதைகள் ஆகியவை பாடப் பொருளாக அமைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்