விளையாட்டு கோட்டா வேலை கல்லுாரி மாணவர்கள் பாதிப்பு
மதுரை: தமிழகத்தில் பல்கலை அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தாததால், விளையாட்டு, &'கோட்டா&' மூலம் வேலை வாய்ப்புக் காக காத்திருக்கும், மாணவர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பல்கலைகளுக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையில் தடகள, குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இதில் தேர்வாகும் சிறந்த வீரர், வீராங்கனையர், பல்கலைகளுக்கு இடையிலான போட்டிக்கு தகுதி பெறுவதோடு, படிவம் - 3 சான்றிதழ் பெறுவர்.இந்த சான்றிதழ் மூலம், விளையாட்டு கோட்டாவில், பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெறுவர்.ஆண்டுதோறும், ஒவ்வொரு பல்கலையின் மூலம், குறைந்தது, 300 பேராவது இதன் மூலம் வேலை வாய்ப்பு பெறுவர்.இந்தாண்டு கொரோனா காரணமாக, விளையாட்டு போட்டிகளே நடத்தவில்லை. தற்போது தான், முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அண்ணா பல்கலை மட்டும் மார்ச், 8 - 31 வரை போட்டிகள் நடத்துவதாக அறிவித்துள்ளது.மற்ற பல்கலைகள் பற்றிய அறிவிப்பு இல்லை.போட்டிகள் நடத்தாத தால், விளையாட்டு கோட்டா வில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த மாணவர்கள் வேதனையில் உள்ளனர். பல்கலை அளவில், 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.அதிலும், 25 வயது மாணவனாக இருந்தால், இந்தாண்டு போட்டியின் மூலம் வேலை கிடைக்குமா, கிடைக்காதா என்பதை உறுதி செய்யும் கடைசி முயற்சி. திறமை வாய்ந்த, 25 வயது நிரம்பும் மாணவர்கள் போட்டியில் பங்கேற்காமலேயே வாழ்க்கையில் தோற்றுவிடுவர்.ஏனென்றால், அடுத்தாண்டு பல்கலை அளவில், இவர்கள் போட்டியிட முடியாது.அரசு இதில் தலையிட்டு, மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உத்தரவிட வேண்டும். எல்லா போட்டிகளும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதிகபட்ச வயது, 25 என்பதை, இந்தாண்டு, 26 வயதாக, ஓராண்டு தளர்வு அறிவிக்க வேண்டும். இதன்மூலம் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும்.