ஆன்லைன் வசதி இல்லையா! ரேடியோவில் பாடம் கற்கலாம்
உடுமலை: &'ஆன்லைன்&' மற்றும் &'டிவி&' வசதி இல்லாமல், கல்வி பயின்று வரும் மாணவர்களுக்காக ஒலிப்பாடங்கள் தயாரிக்கப்பட்டு, ரேடியோவில் ஒலிபரப்ப உள்ளது.கொரோனா பரவலால், &'ஆன்லைன்&' மற்றும் &'டிவி&' வாயிலாக கற்றல் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதேநேரம், இந்த வசதி இல்லாத மாணவர்கள் பலர், சிரமப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த மாணவர்களுக்கும் கற்றல் வளங்கள் சென்றடைய, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக, ஒலிப்பாடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.15 நிமிடத்துக்கு பாடங்களை நடத்துவதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டு, &'ஆல் இந்தியா ரேடியோ&' வாயிலாக ஒலிப்பரப்பவும் உள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், &'10 மற்றும், 12ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரேடியோவில் ஒலிப்பாடங்கள் ஒலி பரப்பப்படும்.திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, மாலை, 5:00 முதல், 6:00 மணி வரை, ரேடியோவைப் பயன்படுத்தி மாணவர்கள் பாடங்களை கற்கலாம். இந்த விவரத்தை மாணவர்களிடம் தெரிவிக்க, அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது&' என்றனர்.