உள்ளூர் செய்திகள்

சர்வதேச பி-ஸ்கூல் பங்கேற்கும் கல்வி காண்காட்சி

போஸ்டன், டியூக், நான்யாங், நாட்டிங்காம், என்.யு.எஸ்., வொல்லாங்காங் உட்பட நூறுக்கும் மேற்பட்ட உலகின் பிரபல பி-ஸ்கூல் பங்கேற்கும் எம்.பி.ஏ., கல்வி கண்காட்சி இந்தியாவில் ஐந்து இடங்களில் நடைபெற உள்ளது. க்யூ எஸ் என்ற நிறுவனம் கடந்த 14 ஆண்டுகளில் 40 நாடுகளில் இதுபோன்ற எம்.பி.ஏ., சர்வதேச கல்வி கண்காட்சியை நடத்தியுள்ளன. இவற்றில் 360க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற மேலாண்மை கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்தியாவில், சென்னை, புதுடில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் நவ., 28ம் தேதி முதல் டிச., 7ம் தேதி வரையிலான நாட்களில் எம்.பி.ஏ., கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது. சென்னையில் தாஜ் கோரமண்டலில் டிச., 7ம் தேதி மாலை 5  முதல் 9 மணிவரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் வெளிநாட்டு பி-ஸ்கூல்களால் வழங்கப்படும் முழுநேர, பகுதிநேர மற்றும் தொலைநிலை முறையிலான மேலாண்மை படிப்புகள், அவற்றிற்கான கல்விக் கட்டண்ம், நிதியுதவி, வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை பெற முடியும். க்யூ எஸ் மற்றும் சில கல்வி நிறுவனங்கள் இணைந்து 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் பங்கேற்கும் கல்வி நிறுவனங்களின் தகவல்களை பெறுவதோடு கல்வியாளர்களுடனும் நேரடியாக கலந்துரையாட முடியும். மேலும் விவரங்களுக்கு: www.topmba.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்