உள்ளூர் செய்திகள்

வாகன ஆய்வாளர் பதவி நேர்முக தேர்வு அறிவிப்பு

சென்னை: மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்குநேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக போக்குவரத்து துறையில், மோட்டார்வாகன ஆய்வாளர்நிலை -- 2 பதவிக்கான நேர்முக தேர்வு, இந்த ஆண்டு ஜூன், 8 முதல், 11 வரை நடக்கவிருந்தது.கொரோனா பரவல்காரணமாக, நேர்முக தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்த தேர்வு ஜூலை 19 முதல், 24ம் தேதி வரை, தேர்வாணைய அலுவலகத்தில்நடத்தப்பட உள்ளது. இதுபற்றிய விபரம், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மற்றும் இ-மெயில் வாயிலாக அனுப்பப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்