மேலூரில் புதிய பாலிடெக்னிக்: முதல்வர் கருணாநிதி அறிவிப்பு!
முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:தென் மாவட்டங்களில், சமூக பொருளாதார மேம்பாடுகளுக்கு வழி வகுத்திட, புதிய தொழிற்சாலைகளை அமைப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அழகிரி முயற்சியால், பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மத்திய நிறுவனத்தின் துணை மையம், மதுரையில் அமைய உள்ளது.இருபத்தைந்து கோடியே 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள மையத்திற்கான செலவில், 50 சதவீதமாக 12 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவினத்தை ஏற்கவும், இதற்காக இடையப்பட்டி கிராமத்தில் 15 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கிடவும் தமிழக அரசு முன் வந்துள்ளது.மதுரை மாவட்டம், மேலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அம்பலக்காரன்பட்டியில், அடுத்த கல்வியாண்டில் (2010-2011) 10 ஏக்கர் பரப்பளவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி துவங்கப்படும். கல்லூரிக்கு தேவைப்படும் கட்டடங்கள், ஆறு கோடி ரூபாயில் கட்டப்படும்.இதன்மூலம், மதுரை மாவட்ட கிராமப்புற ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தொழிற்கல்வி பெற்று, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.