உள்ளூர் செய்திகள்

கல்வி கட்டண குழுவின் செயலில் மாற்றம் தேவை

பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணய குழு இணக்கமான அணுகுமுறையுடன் குழு செயல்பட வேண்டும் என சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் மாநில பொதுச் செயலர் கூறியுள்ளார்.பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணய குழு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இருப்பதால், அக்குழு நீதிமன்றம் போல் செயல்படக் கூடாது. மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள் சார்ந்து, இணக்கமான அணுகுமுறையுடன், பரஸ்பரமாக குழு செயல்பட வேண்டும். பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களை குற்றம் செய்தவர்களை போல நிற்கவைத்து பேசுவது, அசாதாரணமான கேள்வி கேட்பது போன்ற அணுகுமுறைகள் கூடாது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை தற்காலிகமாக நியமிக்காமல், பள்ளிகளின் நிர்வாகம் தெரிந்த, துறை சார் வல்லுனர்களை நியமிக்க வேண்டும். ஆண்டுதோறும் பள்ளி திறக்கும் முன் கட்டணத்தை நிர்ணயித்து, விரைவாக உத்தரவு வழங்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவு செய்யும் தொகையை, தனியார் பள்ளிகளுக்கும் நிர்ணயிக்க வேண்டும். கட்டண நிர்ணயத்தின்போது, ஆசிரியர்கள் எண்ணிக்கை, பள்ளி கட்டடம், வாகன பராமரிப்பு, ஊழியர் சம்பளம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும், என தமிழக தனியார் நர்சரி, பிரைமரி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் மாநில பொதுச் செயலர் நந்தகுமார் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்