உள்ளூர் செய்திகள்

தங்க பதக்கம் ரத்து: மாணவர் சங்கம் கண்டனம்

ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், அறக்கட்டளையால் வழங்கப்படும் தங்கப் பதக்கம் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.சேலம் பெரியார் பல்கலையில், ஒவ்வொரு துறைக்கும் ஒரு அறக்கட்டளை வேண்டும் என, முன்னாள் துணைவேந்தர் முத்துச்செழியன், தனியார் நிறுவனங்களோடு பேசி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார். அதுபோல, ஒவ்வொரு துறைக்கும் ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தி, 1 லட்சம் ரூபாய் வைப்பு நிதியில் வைக்கப்பட்டு, அதன் வட்டியில், துறையில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வந்தது. இதனால் மாணவர்கள் போட்டி போட்டு, தேர்வுகளில் மதிப்பெண் எடுத்து வந்தனர். ஆனால், இந்தாண்டு அறக்கட்டளை சொற்பொழிவு, பெரும்பாலான துறைகளில் நடத்தப்படவில்லை.அதேபோல, முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தங்கப்பதக்கமும் வழங்கப்படவில்லை. பல்கலை ஊழியர்களிடம் விசாரித்தபோது, தங்கப்பதக்கம் கொடுக்க, வட்டி போதவில்லை என்பது தெரிய வந்தது. இந்த தகவலை தெரிவித்த, இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலர் பவித்ரன், பல்கலையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்