திறனறி தேர்வு தகுதி சான்று பெற விண்ணப்பிக்கலாம்
சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு நடத்தப்படும் திறனறி தேர்வில் பங்கேற்க தகுதி சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, ஆணையத்தின் மருத்துவ பதிவு மற்றும் நன்னெறி வாரிய உறுப்பினர் டாக்டர் விஜயலட்சுமி வெளியிட்ட அறிவிப்பு:வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்களுக்கான திறனறி தேர்வு டிச., மாதம் தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தேர்வில் பங்கேற்க தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்பட்ட தகுதி சான்று அவசியம். தகுதி சான்று இல்லாதவர்கள் அதற்காக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆணையத்தின் https://www.nmc.org.in/ என்ற இணையதளத்தில் இன்று முதல் செப்., 11ம் தேதி வரை மாலை 6:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கூடுதல் விபரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.