முட்டை வழங்கும் திட்டம் பள்ளிகளில் நாளை துவக்கம்
பெங்களூரு: மாநிலத்தின் பள்ளி மாணவர்களுக்கு, வாரத்தில் இரண்டு நாட்கள் முட்டை வழங்கும் திட்டம் நாளை துவங்கும், என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வாரத்தில் இரண்டு நாட்கள் முட்டை வழங்கும் திட்டம், 18ம் தேதி நாளை முதல் துவங்கப்படும். மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு, கடலை மிட்டாய் அல்லது வாழைப்பழம் வழங்கப்படும்.காங்கிரஸ் அரசு, இன்னும் ஆறு மாதங்களில் கவிழும் என, பா.ஜ., எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், ஆரூடம் கணித்துள்ளார். இவர் பஸ் நிலையத்தில் அமர்ந்து, கிளி ஜோதிடம் கூறட்டும். அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினால், அதற்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.