முதல்வர் காப்பீடு திட்டத்தில் அரசு டாக்டர்களுக்கு விலக்கு
விருதுநகர்: முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து அரசு டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என விருதுநகரில் அரசு டாக்டர்கள், பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தினார்.அவர் கூறியதாவது: முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தால் அரசு டாக்டர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்படுவதுடன் நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர். இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை மூலம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவையான உபகரணங்களை வழங்க அரசு முன்வர வேண்டும். டாக்டர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் காலிப்பணியிடங்களை காலமுறை சம்பள அடிப்படையில் நிரப்புவதை உறுதி செய்வதுடன் மாவட்ட சுகாதார குழுமம் மூலம் தற்காலிகமாக பணியிடங்களை நிரப்புவதை கைவிட வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354ன்படி அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு அளிக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.