ஹிஜாப் அணிந்த மாணவிக்கு தேர்வெழுத அனுமதி மறுப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், கீழ்பென்னாத்துார், போளூர், செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தமிழ்நாடு தஷிண பாரத் ஹிந்தி பிரசார் சபா சார்பில், ஹிந்தி தேர்வு நேற்று நடந்தது.இதில், கீழ்பென்னாத்துார் அடுத்த சோமாசிபாடி தனியார் பள்ளியில், ஷபானா என்ற மாணவி ஹிஜாப் அணிந்து பங்கேற்றார். கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு, 10 நிமிடங்கள் தேர்வெழுதிய நிலையில், அறை மேற்பார்வையாளர், ஹிஜாப் அணிந்து எழுதக்கூடாது என்றார். இதனால் அவரிடம் மாணவி வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து, பள்ளி நிர்வாகம், ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதிக்க முடியாது என்று கூறவே, அவர் வெளியேறினார்.அதே சமயம் ஹிஜாப் அணிந்த சில மாணவியர், அதை கழற்றி வைத்துவிட்டு தேர்வெழுதினர். இதையறிந்த முஸ்லிம் அமைப்புகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.