உள்ளூர் செய்திகள்

அரசு ஐ.டி.ஐ.,ல் மாணவர் சேர்க்கை அவகாசம்: கலெக்டர்

ஓசூர்: அரசு ஐ.டி.ஐ.,க்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கைக்கு வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:ஓசூர், தேன்கனிக்கோட்டை அரசு ஐ.டி.ஐ.,க்களில், ஆக., 2023 - 24ல் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கைக்கு வரும், 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விரும்பும் மாணவ, மாணவியர், தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து உரிய கட்டணத்தை செலுத்தி, நேரடியாக சேர்க்கை பெறலாம். பயிற்சி காலத்தின் போது, மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும், 750 ரூபாய் மற்றும் விலையில்லா பாடப்புத்தகம், வரைபட கருவிகள், லேப்டாப், சீருடை, மிதிவண்டி, பஸ் பாஸ்,  ஷூ போன்றவை வழங்கப்படும். அரசு பள்ளியில் படித்து சேர்க்கை பெறும் மாணவியருக்கு புதுமை பெண் திட்டத்தில் மாதந்தோறும், 1,000 ரூபாய் கூடுதலாக உதவித்தொகை கிடைக்கும்.ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. பெண் பயிற்சியாளர்களுக்கு அருகிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரி விடுதியில் தங்க, பரிந்துரை செய்யப்படும். பயிற்சி முடித்து செல்லும் மாணவ, மாணவியருக்கு, 100 சதவீதம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். விபரங்களுக்கு, ஓசூர் தொழிற்பயிற்சி நிலையத்தை, 04344 262457, 80986 63711 என்ற எண்ணிலும், தேன்கனிக்கோட்டை தொழிற்பயிற்சி நிலையத்தை, 94425 25608, 94442 15926 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்