உள்ளூர் செய்திகள்

பன்னரகட்டா பூங்காவில் வன உயிரின வார விழா

பன்னரகட்டா: பன்னரகட்டா பூங்காவில், வன உயிரின வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. இயற்கை நடைபயிற்சியில் பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.பெங்களூரு பன்னரகட்டாவில் வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு வன உயிரின வார விழா, நேற்று கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், மாணவர்கள் என 100 க்கும் மேற்பட்டோர், இயற்கை நடைபயிற்சியில் பங்கேற்றனர். கர்நாடகா உயிரியல் பூங்கா ஆணைய உறுப்பினர் அஸ்வின்குமார் சிங், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.வனவிலங்கு புகைப்படங்கள் எடுத்தவர்கள், ஓவியம் வரைந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாணவர்களுக்கு வினாடி, வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல், வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பங்களித்த, நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சுகாதாரத்துறையில் பணியாற்றும் சுஜாதா, ஆஷா பணியாளர்களும் கவுரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் பன்னரகட்டா வன உயிரியல் பூங்கா இயக்குனர் சூர்யாசென், பூங்கா நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்