வேலைவாய்ப்பு முகாம்: பதிவு செய்ய அமைச்சர் அழைப்பு
போக்குவரத்து துறை அமைச்சரும் தி.மு.க., மாவட்ட செயலருமான நேரு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழக முதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க., தலைமை சார்பில், திருச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள், பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது. மாவட்டத்திலுள்ள 18 வயது முதல் 30 வயது நிரம்பிய எட்டாவது முதல் பட்டமேற்படிப்பு வரை படித்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப தனியார் துறையில் பணியாற்ற பிப்ரவரி 19, 20, 21ம் தேதிகளில் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கனிமொழி எம்.பி., தலைமையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இம்முகாமில் தமிழகத்திலுள்ள முக்கிய தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையானவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். இம்முகாமில் பங்கு கொள்ள விரும்புகிற துறையூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜமீந்தார் மேல்நிலைப்பள்ளியில் இன்று 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை காலை 9 மணி முதல் 5 மணி வரை வயது சான்றிதழ் நகலுடன் வந்து பதிவு செய்து பயனடைய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.