போலி கல்விச்சான்று வழக்கில் அறிக்கை கோரும் ஐகோர்ட்
மதுரை திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.புகழேந்தி அமர்வு முன் ஆஜரான தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:பல்வேறு பல்கலைகளில் போலி சான்று பெற்ற 14 பேர் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் உள்ளதாக தெரிகிறது. அவர்கள் உண்மையில் படித்து அச்சான்று பெற்றனரா என மேலும் விசாரிக்க ஆவணங்களை சேகரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.விசாரணையில் தாமதம் குறித்து அதிருப்தியை வெளியிட்ட நீதிபதிகள், &'இவ்விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, இரண்டு வாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்&' என உத்தரவிட்டனர்.