உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு பணித்திறன் பயிற்சி: அதிகாரி திடீர் விசிட்

திருத்தணி: திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களின் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி கடந்த 25ம் தேதி துவங்கியது.முதல் நாளில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் பாடங்கள் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி நடந்தது. நேற்று முன்தினம் அதே வகுப்பு கணிதம் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கும், நேற்று அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.நேற்று மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் ஆர். சுவாமிநாதன் ஆய்வு செய்தார். பயிற்சியில், திருத்தணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவகுமார், ஆசிரியர் பயிற்றுநர்கள் மோகன்தாஸ், சரவணன், செந்தில்குமார், தண்டபாணி ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்