உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் கல்விக்கடன் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

கடலுார்: கல்லுாரி மாணவர்கள் கல்விக்கடன் பெற, இணைய வழி மூலம் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கல்விக் கடன் முகாம் தொடர்பாக, கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில், வங்கியாளர்கள், கல்லுாரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதுகுறித்து கலெக்டர் தெரிவிக்கையில், கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க ஒருங்கிணைக்கும் பணி சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை இணைந்து அனைத்து வட்டங்களிலும் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லுாரிக்கும் அக்கல்லுாரியின் முதல்வர் கல்விக்கடன் வழங்குதல் தொடர்பான கண்காணிப்பு அலுவலராக செயல்படுவார்.மேலும், மாணவ மாணவியர http://www.vidyalakshmi.co.in என்ற இணையவழி மூலமாக உரிய ஆவணங்களுடன் கல்விக்கடன் கோரி விண்ணப்பிக்கலாம். மேலும், கல்விக்கடன் கோரி விண்ணப்பிக்க வசதியாக இணையதள வசதி ஏற்படுத்தி தர கல்லுாரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜகதீஸ்வரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா, வங்கியாளர்கள், கல்லுாரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்