தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதியவர்கள் தங்களது விடைத்தாள்களின் ஒளி நகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மறுகூட்டல்/மறுமதிப்பீடுக்கும் விண்ணப்பிக்கலாம்.அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த ஜூன்/ஜூலை மாதத்தில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுதி விடைத்தாள் ஒளிநகல்களை நாளை மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் மறுகூட்டல்-IIக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.205 கட்டணமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.505 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணம் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.