உள்ளூர் செய்திகள்

ராகிங் கொடுமை: தப்பிய மாணவரை தேடுது போலீஸ்

கோவை: திருப்பூரை சேர்ந்த, 18 வயது மாணவர், கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.இவர் கடந்த, திங்கட்கிழமை இரவு அறையில் இருந்த போது பக்கத்து அறையில் தங்கி இருந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் உட்பட சீனியர் மாணவர்கள், ஏழு பேர் அவரை ராகிங் செய்து, மொட்டை அடித்து துன்புறுத்தினர். மேலும் அந்த மாணவரை நிர்வாணப்படுத்தி தங்களது மொபைல் போனிலும் வீடியோ எடுத்தனர்.இதுகுறித்து அந்த மாணவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். கல்லுாரி விடுதியில் தங்கி இருந்த இரண்டாம் ஆண்டு படித்து வரும் இரண்டு பேர், 3ம் ஆண்டு படித்து வரும் இருவர், 4ம் ஆண்டு படிக்கும் மூன்று பேர் என, ஏழு பேர் மீது, போலீசார் ஆறு பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.அவர்களை கல்லுாரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கும் உடந்தையாக இருந்ததாக மூன்றாம் ஆண்டு படித்து வரும் மேலும் ஒரு மாணவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தப்பியோடிய அவரை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்