கல்லுாரி மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி
விருதுநகர்: விருதுநகரில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது. தனியார் கல்லுாரியில் பயிலும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் 5 கல்லூரிகளை தேர்வு செய்து அதில் இளங்கலை, முதுகலை தமிழ் பயிலும் 30 மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களின் லட்சியம், எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பின் அவர் பேசியதாவது: கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் லட்சியம் உண்டு. அதை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது, என்றார்.