உள்ளூர் செய்திகள்

நுாற்பு நெசவு பதப்படுத்துதல் ஆலை அமைக்கிறது ராம்ராஜ்

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சமீபத்தில் நடந்தது. இம்மாநாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, ராம்ராஜ் காட்டன் நிறுவனமும் ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய்க்கான தொழில் முதலீட்டில், 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், நுாற்பு நெசவு பதப்படுத்துதல் ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் கூறியதாவது:தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்த உள்ள முதலீடுகள் வாயிலாக, பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன், தொழில் முன்னேற்றத்தில் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்லவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்