எஸ்.ஐ., தேர்வில் மதுரை போலீஸ் திவ்யா முதலிடம்!
மதுரை: தமிழ்நாடு காவல்துறை நடத்திய எஸ்.ஐ., தேர்வில் மதுரையைச் சேர்ந்த முதல்நிலை பெண் காவலர் திவ்யா முதலிடம் பிடித்து சாதனை. பெண்கள் பிரிவில் 100க்கு 83 மதிப்பெண் எடுத்ததால் திவ்யா எஸ்.ஐ., ஆக தேர்வு ஆகி உள்ளார். திவ்யா தற்போது மதுரை மாநகர காவல் துறைக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட எஸ்.ஐ தேர்வில் 123 சார்பு ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.