தர மேலாண்மை அமைப்புக்காக ஏழு நிறுவனங்கள் கூட்டணி
புதுடில்லி: இந்திய வணிகங்களுக்கு இடையே, தரம் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த, ஐ.எப்.க்யூ.எம்., எனும், இந்திய தர மேலாண்மை அமைப்பு ஒன்றை, இந்தியாவின் ஏழு முன்னணி நிறுவனங்கள், கூட்டமைப்பின் கீழ் துவக்கி உள்ளன. டாடா சன்ஸ், டி.வி.எஸ்., மோட்டார், மதர்சன் குழுமம், பாரத் போர்ஜ், சன் பார்மா, போயிங் இந்தியா மற்றும் பயோகான் ஆகியவை, இந்த ஏழு நிறுவனங்களில் அடங்கும்.லாப நோக்கமற்ற நிறுவனமாக துவங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, தர மேலாண்மையில் உள்ள சமீபத்திய அறிவு மற்றும் கருவிகளுடன், வணிக தலைவர்களை திறன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், மேக் இன் இந்தியா திட்டத்தை, உலகளவில் எடுத்து செல்வதும் இதன் நோக்கமாகும்.இதுகுறித்து, டி.வி.எஸ்., நிறுவனத்தின் கவுரவ தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் கூறியதாவது:இந்த அமைப்பு, இந்திய வணிகங்களின் போக்கையே மாற்றக்கூடிய திறன் கொண்டது. தொழில்துறைகள், தங்கள் சிறந்த நடைமுறைகளை பகிர்வதற்கும், தரம் மற்றும் கண்டுபிடிப்புகளில், துறைகளுக்கு இடையே திறன்களை கற்பிப்பதற்கும் இது உதவும். எனவே, நமது உண்மையான திறனை வெளிக்கொண்டு வந்து, உலகளவில் சிறந்த போட்டித்தன்மையுடன் செயல்பட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.டாடா சன்ஸ், டி.வி.எஸ்., உட்பட, 7 முன்னணி நிறுவனங்களின் கூட்டமைப்பில், தர மேலாண்மைக்கான அமைப்பு துவக்கப்பட்டுள்ளது