உள்ளூர் செய்திகள்

பள்ளியில் பாகுபாடு கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பாகுபாடுகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் பள்ளி வளாகத்தில் நடைபெறாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.நீதிபதி சி.சரவணன் தன் உத்தரவில் கூறியதாவது:மனுதாரர் எழுப்பிய பிரச்னை 2018ல் நடந்தது. மனுதாரரின் மகள் தற்போது பள்ளிப் படிப்பை முடித்திருப்பார். பள்ளியில் அவர் படித்த போது, கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டு நம்பும் வகையில் இல்லை.துாய்மைப் பணியாளரிடம் தனிப்பட்ட விரோதம் காரணமாக உடற்கல்வி ஆசிரியர் கூறியதால், மனுதாரர் இங்கு வழக்கு தொடர முன்வந்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக மனுதாரரின் மகள் இப்பிரச்னையில் தேவையின்றி இழுத்தடிக்கப்பட்டுள்ளார்.எவ்வாறாயினும், இதுபோன்ற பாகுபாடுகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் பள்ளி வளாகத்தில் நடைபெறாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பொது இடத்தில் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுவோரை 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்