உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மை குழுவினருக்கு வாட்ஸ் ஆப்பில் விழிப்புணர்வு

உடுமலை: பள்ளி மேலாண்மைக்குழுவில் பங்கேற்க, பெற்றோருக்கு வாட்ஸ் ஆப்பிலும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அரசுப்பள்ளிகளில், நடப்பாண்டில் புதிய பள்ளி மேலாண்மைக்குழு அமைப்பதற்கான மறுகட்டமைப்பு பணிகள் நடக்கிறது.இக்குழுவின் நோக்கம், பள்ளி மேலாண்மைக்குழுவினருக்கு பள்ளி மேம்பாட்டில் உள்ள பொறுப்பு உள்ளிட்ட குழுவின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்து, புதிய உறுப்பினர்களை ஆசிரியர்கள் குழுவினராக சேர்க்க வேண்டும்.மேலும், இவ்வாறு சேர்க்கப்படும் குழுவினர் தவறாமல், ஒவ்வொரு கூட்டத்திலும் பங்கேற்பதையும் உறுதி செய்ய வேண்டும்.இதற்கான விழிப்புணர்வு கூட்டம், மாநில அளவில் ஒவ்வொரு கட்டமாக நடக்கிறது. உடுமலை சுற்றுவட்டார அரசு பள்ளிகளில், மாணவர்களின் பெற்றோருக்கு நேரடியான கூட்டம் மட்டுமில்லாமல், வாட்ஸ் ஆப் வாயிலாகவும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும், ஒவ்வொரு பெற்றோரிடமும் கலந்துரையாடி, உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்