முதுகலை உயிரியல் ஆசிரியருக்கு பசுமை முதன்மையாளர் விருது
கிருஷ்ணராயபுரம்: அரங்கநாதம்பேட்டை, அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை உயிரியில் ஆசிரியருக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்பட்டது.கரூர் மாவட்டம், அரங்கநாதம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், முதுகலை உயிரியல் ஆசிரியராக சந்தன துரை என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்து கொண்டு, பல இடங்களில் பல்வேறு வகையான, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வந்தார்.இந்த செயல்கள் பாராட்டி, மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் கடந்த ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதுக்காக தேர்வு செய்து, அதற்கான சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஆக.,15ல் சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.விருது பெற்ற ஆசிரியர் சந்தனதுரையை, கரூர் மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி, பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா மற்றும் சமூக ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.