உள்ளூர் செய்திகள்

அகில இந்திய தொழிற்தேர்வில் தனி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம்: தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வராக பங்கேற்க, தகுதியானவர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:வரும், 2025 ஜூலையில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தில் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வராக பங்கேற்க, தகுதியானவர் விண்ணப்பிக்கலாம்.www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்த பின், 200 ரூபாய் கட்டணம் செலுத்தி உரிய ஆவணங்களுடன், சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, வரும் அக்., 15ல் முதனிலை கருத்தியல் தேர்வு, மறுநாள் செய்முறை தேர்வு, கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.இதற்குரிய முழு விபரம், விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யும் இணையதளத்தில் உள்ளது. தனித்தேர்வராக எழுதுவதற்கு விண்ணப்பிக்க வரும் 18 கடைசி நாள். பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்