தொழில் துவங்க மாணவர்கள் ஆர்வம் ஆய்வில் தகவல்
சென்னை: இந்திய கல்லுாரி மாணவர்களில், 32.5 சதவீதம் பேர் புதிய தொழில்முனைவோராக மாறியுள்ளதாக, மாண்டி ஐ.ஐ.டி.,யின் சார்பில் நடத்தப்பட்ட தேசிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி ஐ.ஐ.டி.,யின், கெஸ் என்ற அமைப்பு, நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், 13,896 பேரிடம் தொழில் முனையும் ஆர்வம் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது.அதில், 32.5 சதவீதம் பேர் ஏற்கனவே புதிய தொழில் முனைவோராகவும், புதிய தொழில் துவங்குவதில் ஆர்வம் உள்ளோராகவும் இருப்பது தெரியவந்துள்ளது.இது, உலக சராசரியான 25.7 சதவீதத்தை விட அதிகம். அவர்களில், 14 சதவீதம் பேர் படிப்பை முடித்ததும், நிறுவனராகும் திட்டத்துடன் உள்ளதும், 31.4 சதவீதம் பேர் பட்டம் பெற்று, ஐந்தாண்டுகளில் தொழில் துவங்குவதாகவும் தெரியவந்துள்ளது.அந்த விரிவான ஆய்வறிக்கையில், தொழில் துவங்குவதில் இளைஞர்களின் ஆர்வம் குறித்து, பல்வேறு தகவல்கள் உள்ளன. அந்த அறிக்கை, www.guesssindia.in/coming-soon-1 என்ற இணைய இணைப்பில் உள்ளது.