புத்தக திருவிழா பணி கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் புத்தகத் திருவிழா அரங்குகள் அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி, துருகம் சாலை வி.எம்., திடலில், 3வது புத்தகத் திருவிழா வரும், 14ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. இதில் முன்னணி பதிப்பக புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.இதற்காக, 90 அரங்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார்.விழா மேடை, புத்தக விற்பனை அரங்குகள், போக்குவரத்து வசதி, வாகனம் நிறுத்துமிடம், பார்வையாளர்கள் அமரும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டார். மேலும், பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு அதிகளவில் புத்தகங்களை வாங்கி, ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.