தேர்வு பயத்தில் கையை கிழித்து கொண்ட மாணவர்
புதுச்சேரி : பொதுத்தேர்வு பயத்தில் பிளஸ் 2 மாணவர் கையை கிழித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.புதுச்சேரி சர்தார் வல்ல பாய் படேல் சாலை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் மகன் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்- 2 படித்து வருகிறார். அவர் கடந்த சில தினங்களாக தேர்வு பயத்தால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.நேற்று அந்த மாணவர் திடீரென வீட்டில் இருந்த பொருட்களை சாலையில் தூக்கி வீசினார். மேலும் அந்த கையில் கண்ணாடி துண்டு ஒன்றை வைத்துக்கொண்டு, பெற்றோரை மிரட்டி, தனது கையை கிழித்துக் கொண்டார்.தகவலறிந்த பெரியகடை போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவருடன் பேச்சு கொடுத்து பிடித்து கண்ணாடி துண்டை கையில் இருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.